அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கான நிலுவைத் தொகை நாளைமுதல் வங்கி கணக்குகளில்!

அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை நாளை (27) முதல் உரிய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தகுதி பெற்ற 212,423 குடும்பங்களுக்கான நிலுவைத்தொகையை வங்கியில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

1,314,007,750.00 ரூபாய்க்கும் அதிகளவான நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு நலன்புரி நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply