நகர சபை உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!

நகர சபை உழவு இயந்திரத்தின் டிரெய்லரில் பயணித்த ஊழியர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் புத்தகயா மாவத்தையிலிருந்து விஜயபுர மயானம் நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தில் கழிவுகளை ஏற்றும் போதே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த நபர் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply