சுமார் 20 நாட்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவத்துள்ளது.
அவர் கடும் சுகவீனம் அடைந்துள்ளவதாகவும், இறந்துவிட்டதாகவும் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் பசளை உற்பத்தி நிலையம் ஒன்றை அவர் திறந்து வைத்ததாக கூறி வடகொரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த நிகழ்வு தொடர்பான எவ்வித புகைப்படங்களையும் வடகொரிய அரச ஊடகம் வெளியிடவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஏப்ரல் 12ம் திகதியின் பின்னர் வடகொரிய அதிபர் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.