ஹிக்கடுவ கடலில் நீராடச் சென்ற 19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், நீராடச் சென்ற இடமானது ‘ஆபத்தான பகுதி’ என்ற எச்சரிக்கை பலகை பொறிக்கப்பட்டிருந்ததோடு, அவர் அதனை பொருட்படுத்தாமல் அவ்விடத்தில் நீராடச் சென்றுள்ளமை போலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர், இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து காணாமல் போன நபரை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.