இன்று நுவரெலியாவில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று (17) நுவரெலியாவிலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திலும், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் நுவரெலியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையின் கீழான பொலிஸ் அதிகாரிகள் குழுவினராலும் , நுவரெலியா மாநகரசபை சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வையின் கீழ் மாநகசபை ஊழியர்கள் இணைந்தும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலை திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது பேருந்து தரிப்பிடத்தில் அனாவசியமான முறையில் காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள், மற்றும் படங்கள் நிறைந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டு வெற்று வளவுகளில் உள்ள குப்பைகளும் அகற்றப்பட்டு தூய்மையாக்கப்பட்டன.

குறித்த பகுதிகளை மாநகரசபை வாகனத்தின் உதவியுடன் தண்ணீர் விசிறி கழுவி சுத்தம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது அவ்விடத்தில் நுவரெலியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் பணியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளில் வெற்றிலை எச்சில் துப்பிய சிலருக்கும், அசுத்தமான செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply