பெண்ணொருவரின் சடலம் மட்டக்களப்பு வாவியில் கரையொதுங்கியது!

மட்டக்களப்பு வாவிக்கரை முனீச் விக்டோரியா நாட்புற வீதிக்கு அருகாமையில் உள்ள வாவியிலிருந்து அடையாளங்காணப்படாத நிலையில் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு இன்று (18) காலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரத திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எம்.அகமட் சின்னலெப்பை சடலத்தை பார்வையிட்டதுடன், குறித்த சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசேதனையினை தொடர்ந்து சடலம் அடையாளங்காணப்படுமிடத்து நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண்ணை அடையாளங்காணுவதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply