![](https://onlinekathir.com/wp-content/uploads/2023/02/arrest.png)
இலங்கையில் நடைபெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பெற்ற மூன்று சந்தேக நபர்கள் இன்று (07) விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
துபாயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் குழுவால் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை காவல்துறையின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொடர்புபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பித்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று காலை UL-226 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.