தென்கொரிய விமான விபத்தில் இருவரை தவிர அனைவரும் உயிரிழந்திருக்கலாம்!

தென்கொரிய விமானவிபத்தில் விமானத்தில் பயணித்தவர்களில்  இருவரை தவிர அனேகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் விமான நிலையத்தில் மிகவும் வேதனையளிக்க கூடிய காட்சிகளை காண முடிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் பயணம் செய்தவர்களின் 100க்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்கள் தகவல்களை பெறுவதற்காக முவான் விமானநிலையத்தின் விசேட பிரிவில் திரண்டிருந்தனர்.

முவான் தீயணைப்பு பிரிவின் தலைவர் லீ ஜியோங் ஹியோன் விமானத்திலிருந்தவர்களில் அனேகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தவர்களிற்கு தெரிவித்தவேளை அந்த அறையில் பெரும் அவலக்குரல் எழுந்தது என தென்கொரியாவின் யொன்காப் நியுஸ் தெரிவித்துள்ளது.

எவரும் உயிர் தப்பியிருப்பதற்கான வாய்ப்பே இல்லையா என பயணிகளின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தீயணைப்புபிரிவின் தலைவரிடம் கேட்டார்.அதற்கு தலையை அசைத்து பதிலளித்த தீயணைப்பு பிரிவின் தலைவர் சொல்வதற்கு மன்னிக்கவேண்டும் நிலைமையை பார்த்தால் அப்படித்தான் தெரிகின்றது என தெரிவித்தார் என தென்கொரிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகளும் விமானசேவையும் தாமதமாக செயற்பட்டதாக குடும்பத்தவர்கள் சிலர் விசனம் வெளியிட்டனர்இதங்களை விமானவிபத்து இடம்பெற்ற பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு மன்றாட்டமாக அவர்கள் கேட்டனர்இஎன தெரிவித்துள்ள யொன்காப் நியுஸ் ஆனால் அதிகாரிகள் அதற்கு அனுமதிவழங்க மறுத்துள்ளனர்.

பதில் ஜனாதிபதி சொய் சங் மொக் விமானநிலையத்திற்கு சென்றவேளை குடும்பத்தவர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர்இஎங்கள் குடும்பங்கள் குறித்து முதலில் சிந்தியுங்கள் என மன்றாடினார்கள் அதற்கு அவர் உங்கள் உணர்வுகளை நான்புரிந்துகொள்கின்றேன் என யொன்காப் நியுஸ் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply