![](https://onlinekathir.com/wp-content/uploads/2025/02/images-7.jpg)
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து சொந்த நாட்டிற்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரித்தானிய பிரதமர் கேர் ஸ்டார்மர் தலைமையில் புதிய அரசு பதவியேற்றதும் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், வெளிநாட்டு குற்றவாளிகள் என 19,000 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
சமீபத்தில், பிரித்தானியாவில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், வணிக வளாகங்கள், வாகனம் தூய்மை செய்யும் இடங்களில் பிரிட்டன் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அகதிகள் என பலரும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை கைது செய்து, ஆவணங்களை சரிபார்த்த பின்னர் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பிரித்தானியாவும் தற்போது சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.