
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணி, முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
35 வயதான ஸ்டீவ் ஸ்மித், 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் உட்பட 5800 ரன்கள் குவித்துள்ளார்.