தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்!

தென்கொரிய ஜனாதிபதி உடன் அமுலாகும் வகையில் பதவிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கம் குறித்த வழக்கை மேற்பார்வையிட்ட அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகள் குழு, குறித்த தீர்மானத்தை இன்று (04) ஒருமனதாக உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கின் போது அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி, இரு தரப்பினரின் வாதங்களையும் வாசித்தார். தென் கொரிய ஜனாதிபதி யூன் இராணுவச் சட்டத்தை அமல்படுத்திய போதும் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக 60 நாட்களுக்குள் புதிய தேர்தலை நடாத்த வேண்டும்.

விசாரணையின் போது ​தேர்தல் நடைபெறும் காலம் வரையில் தென் கொரியாவின் தற்போதைய பிரதமர், பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply