நகை ,பணம் என்பவற்றை திருடுவதற்காக 8 வயோதிபர்களை திருமணம் செய்த பெண்

இந்தியாவில் 10 வருடங்களில் 8 வயோதிபர்களை திருமணம் செய்து, அவர்களின் பணம், மற்றும் மற்றும் சொத்துகளை திருடித் தப்பிச் சென்ற பெண் ஒருவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உத்தரபிரதேஷைச் சேர்ந்த கிஷோர் என்ற 66 வயதான கட்டட நிர்மாணக்காரர் ஒருவரை திருமணம் செய்து அவரது சொத்துகள் ஏமாற்றியதையடுத்து இப்பெண்ணின் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கிஷோரின் முதல் மனைவி கடந்த வருடம் காலமாகியுள்ளார். இந்நிலையில், தனது மகனை விட்டு முதமையில் அவர் தனியாக வசித்துவந்ததால், வயோதிபர்கள் மற்றும் விவாகரத்தானவர்களுக்கு இணையத்தளம் மூலம் வரண்களை தேடித்தரும் டெல்லியிலுள்ள திருமண சேவை ஒன்றின் உதவியை நாடியுள்ளார்.

அதன்போது, மோனிக்கா என்ற இளம்பெண் ஒருவரை குறித்த திருமண சேவை உரிமையாளர் அறிமுகம் செய்திருந்த நிலையில், கிஷோரும் அவரை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். தான் விவாகரத்தானவர் என்று மோனிகா கூறியுள்ளார்.

பின்னர், அவ்வயோதிபருக்கு மோனிகாவுக்கு திருமணமாகி சில மாதங்கள் கழிந்தன. திடீரென ஒருநாள் காலை கிஷோர் விழித்துபார்த்தபோது, 15 இலடசம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் உடைமைகளுடன் மோனிகா தப்பிச் சென்றமை தெரியவந்தது.

இதனையடுத்து, பொலிஸ் முறைப்பாடு செய்தபோது, மோனிகா கடந்த 10 வருடகாலமாக இதே பாணியில் 8 வயோதிபர்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளமை தெரியவந்தது. இப்பெண்ணின் அனைத்து திருமணங்களையும் மேற்படி திருமண சேவை நிறுவனமே நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மோனிகா, அவரது குடும்பத்தினர் மற்றும் திருமணசேவை நிறுவன உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக மோசடி, நம்பிக்கை மோசடி மற்றும் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir