கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் உலக நாடுகள் முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியையும், கடன் நெருக்கடியையும் எதிர்கொள்கின்றன என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
டெலிகொன்பரன்ஸ் முறையின் மூலம் நேற்று(திங்கட்கிழமை) அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் உலகநாடுகள் முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியையும், கடன் நெருக்கடியையும் எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், மூன்றாம் உலகநாடுகளுக்கு கடன் நிவாரணமும், நிதி உதவிகளும் அவசியம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்தவகையில், சர்வதேச நிதி அமைப்புகளும், நிதி வழங்குநர்களும் பலவீனமான நிலையில் உள்ள நாடுகளுக்கு கடன் நிவாரணத்தையும், அதிகளவு நிதியையும் வழங்கவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக நடுத்தர வருமான நாடுகள் கடுமையான பல்வேறுவகைப்பட்ட பொருளாதார சமூக பிரச்சினைகளை எதிகொள்கின்றன என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக இந்த முக்கியமான தருணத்தில் இந்த தேவைகள் குறித்து கவனத்தை செலுத்துவதும், பொருளாதார வீழ்ச்சியை, தடுப்பதற்காக நிதி உதவிகளை வழங்குவதும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.