இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (21) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இரகசியமான முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரகசியமான முறையில் முல்லைத்தீவு வவுனியா வீதி ஊடாக பாதுகாப்பு வாகனங்களுடன் பயணம் மேற்கொண்ட அவர் நண்பகல் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு
பின்னர் கேப்பாபிலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்திற்கு சென்றுள்ளதுடன்
படையினரால் மற்றும் விமானப்படையினரால் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களின் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.