வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது – அரசாங்கம் எச்சரிகை

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.

கொரோனா ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச அரச மற்றும் தனியார்துறையில் எவரும் தொழில்களில் இடைநிறுத்தப்படக்கூடாது என்று கோரியுள்ளார்.

ஜனாதிபதி செயலணி புதிய வர்த்தக முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். ஏற்கனவே பாரிய, மத்திய மற்றும் சிறிய வர்ததகங்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உரிய ஒழுங்கு விதிகளின்படி தனியார்துறையினர் எதிர்வரும் 11ஆம் திகதியன்று தமது பணிகளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும் என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir