நாங்கள் பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசம் ; க.வி.விக்னேஸ்வரன்

மே மாதம் 18 ஆம் திகதியன்று நாங்கள் பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளோம். உங்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை நாட்டுமாறும் மரக் கன்றுகளை தங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது.
அந்தவகையில் கீழ்வரும் நபர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

1. யாழ்ப்பாணம் மாவட்டம் – திரு.கந்தையா இராஜதுரை – 0718584882
2. வவுனியா மாவட்டம் – திரு.விநாயகமூர்த்தி குககேசன் – 0775024784
3. மன்னார் மாவட்டம் – திரு.ஆறுமுகம் செல்வேந்திரன் – 0774349363
4. முல்லைத்தீவு மாவட்டம் – திரு.நடனசாபாபதி வன்னியராஜா – 0775027674
5. கிளிநொச்சி மாவட்டம் – திரு.கந்தசாமி பரிமளராஜ் (பாமகன்) – 0776550030
6. திருகோணமலை மாவட்டம் – திரு.சிவசுப்பிரமணியம் நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்) – 0753113541
7. மட்டக்களப்பு மாவட்டம் – திரு.எம்.உதயராஜ் – 0779080697; 0713109938

எமது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் இந்த மரம் நாட்டும் பணியில் அன்றைய தினம் ஈடுபடுவார்கள். கொரோனா வைரஸ் சம்பந்தமாக தரப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மனதிற் கொண்டு அவற்றிற்கு அமைவாக பயன்தரு மரம் நாட்டல் செயற்பாட்டை முன்நடத்துங்கள்.

அதுமட்டுமன்றி எமது மக்கள் யாவரும் வரும் மே 18-18-18ன் போது நீங்கள் இருக்கும் இடங்களில் 2009 மே மாதம் இதே தினத்தன்று முள்ளிவாய்க்காலில் மரணித்தோர் நினைவாக விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் செய்ய வேண்டுகின்றோம்.

18-18-18 என்றால் மே 18ந் திகதி மாலை 6 மணி 18 நிமிடங்கள். அந்த நேரம் வரும்போது விளக்கேற்றுங்கள். இதனை எமது புலம் பெயர்ந்த உறவுகளும் தாம் வாழும் நாடுகளில் அவர்கள் நேரத்திற்கேற்ப நடைமுறைப்படுத்துகின்றார்கள்.

ஒட்டுமொத்த தமிழினமே உலகளவிய ரீதியில் இதைச் செய்வதால் நாம் இரண்டு விடயங்களை நிலை நிறுத்தப் போகின்றோம். ஒன்று மரணித்தோர் அனைவரும் எமது உறவுகள்.

அவர்களை அன்றைய தினம் நாம் நினைவில் இருத்துகின்றோம் என்பது.

இரண்டு அன்று நடந்தது எமக்கெதிரான இனப்படுகொலையின் ஒரு அம்சம். அரசாங்கப் படைகள் அன்று செய்த கொடூரமான மனிதாபிமானமற்ற செயலை இன்றும் நாம் கண்டிக்கின்றோம் என்பது.

இந்த மனோநிலையுடன் அன்று எமது மக்கள் யாவரும் மாலையில் விளக்கேற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir