விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியோர் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணை !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்றையதினம் (13) முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில்  விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியோரின் வீடுகளுக்கு இன்றையதினம் (14)சென்று  பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன் தெரிவித்துள்ளார் .

சிவில் உடை தரித்த தம்மை பொலிஸார் என அடையாள படுத்தியவர்கள் இவ்வாறு ஒவ்வொருவரினதும் வீடுகளுக்கு சென்று நினைவேந்தல் நிகழ்வை செய்தவர்களது பெயர் விபரங்களை கேட்டு விசாரணை மேற்கொண்டதோடு பதிவுகளையும் மேற்கொண்டனர் .மேலும்  விசாரணைகளை மேற்கொண்டவர்களிடம்  மீண்டும் சிறை செல்ல போகின்றீர்களா ? எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர் . அத்தோடு இவ்வாறான நிகழ்வுகளை செய்வதாக இருந்தால் முற்கூட்டியே பொலிஸாரின் அனுமதியை பெறவேண்டும் எனவும் கூறி சென்றுள்ளதாக தமிழ் தேசிய  மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தெரிவித்தார் .

மேலும் நினைவேந்தல் மேற்கொண்ட இடத்துக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் அரச புலனாய்வாளர்கள் பொலிஸார் ஆகியோர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகவும் கிந்துஜன் தெரிவித்தார் .

You May Also Like

About the Author: kalaikkathir