முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்று கூறிக்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை எவரும் நினைவுகூர முடியாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் இராணுவ வெற்றி தினம் அல்லது போர் வெற்றி தினம் என அங்கீகரிக்கப்பட்ட தினம் உள்ளது. அது மே மாதம் 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும்.
ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பானது நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அப்படியென்றால் அவர்களின் நிகழ்வுகளும் நாட்டில் தடைசெய்யப்பட்டதாகவே இருக்க முடியும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எனக் கூறிக்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை எவரும் நினைவுகூர முடியாது.
ஆனால், போரில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களை அவர்களின் குடும்ப உறவினர்கள் வீடுகளில் நினைவுகூர முடியும். பொது இடங்களில் எவரும் ஒன்றுகூடி நினைவுகூர முடியாது” – என குறிப்பிட்டுள்ளார் .