நாளையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகின்றன.
நாசா விண்வெளி வீரர் சேன் கம்பரோ மற்றும் மேகன் மெக் ஆர்தர், அகிகோ அசிதே, தாமஸ் பெஸ்ட் கோட்ஸ் ஆகியோர் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் தனியார் விண்வெளி ஆய்வு மையமான ஸ்பெக்ஸ் விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்வெளி ஓடத்தில் விண்வெளியில் விளையாட்டு போட்டி முயற்சி ஒன்று நடைபெற்றுள்ளது. புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பந்தை வைத்து விண்வெளி வீரர்கள் விளையாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இவர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடி உள்ளனர்.