ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி விழா உரையால் நாட்டுக்குத்தான் ஆபத்து என்று ரணில், சஜித், சம்பந்தன் அணிகள் விஷமத்தனமான கருத்துக்களை வெளியிடுவது சிறுபிள்ளைத்தனமானது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரான அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
எம்மை மீறி எம் மீது சர்வதேசம் கைவைக்க முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போர் வெற்றி விழாவில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
படையினரின் தியாகங்களை அவமதிக்க விடமாட்டார் என்பதையும், படையினர் மீது சர்வதேசம் வாய்க்கு வந்த மாதிரி குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முடியாது என்பதையும் ஜனாதிபதி அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.
எனவே, இனிமேலும் சர்வதேசம் எம்மையும் படைவீரர்களையும் எமது தாய்நாட்டையும் மிரட்ட முடியாது. அப்படி மிரட்டினால் சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து நாட்டை விலக்கிக்கொள்வார் ஜனாதிபதி.
இந்தநிலையில், ஜனாதிபதியின் போர் வெற்றி விழா உரையால் நாட்டுக்குத்தான் ஆபத்து என்று ரணில், சஜித், சம்பந்தன் அணிகள் விஷமத்தனமான கருத்துக்களை வெளியிடுவது சிறுபிள்ளைத்தனமானது என கூறியுள்ளார் .