புவி வெப்பமடையும் வேகம் அதிகரிப்பு

‘புவி வெப்பமடையும் வேகம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 2030ம் ஆண்டுக்குள் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. கடும் வெயில் நிலவுவது போன்ற இயற்கை சீற்றங்களை தவிர்க்க முடியாது’ என, ஐ.நா., நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பருவ நிலை மாறுபாடு என்பது உலகளாவிய பிரச்னை. இதை எதிர்கொள்வதற்காக, 2015ல் பாரிசில் நடந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா உட்பட 195 நாடுகள் கையெழுத்திட்டன.
அதன்படி, 2030க்குள் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்ஷியஸ் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு, காற்றில் அதிக அளவு கார்பன் – டை – ஆக்சைடு வெளியிடுவதை தடுக்க வேண்டும்.இந்நிலையில் ஐ.நா.,வில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர்கள், விஞ்ஞானிகள் இணைந்து, ஐ.பி.சி.சி., எனப்படும் நாடுகளுக்கு இடையேயான பருவ நிலை மாறுபாடு குழுவின் ஆறாவது அறிக்கையை நேற்று வெளியிட்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir