தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டு அரசு படைகளுடன் கடும் போரில் ஈடுபட்டு வருகின்றனர். உலகமே கண்டனம் தெரிவிக்கும் இந்த வன்முறை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
சமீபத்தில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் படைகள் மட்டுமல்லாமல் பல அப்பாவி குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது ரேடியோ, வானொலி நிலைய மேலாளர் ஒருவர் தாலிபான்களால் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே பத்திரிகையாளர்கள் சிலர் தாக்குதலில் பலியானதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஓர் பத்திரிக்கையாளர் பலியாகியுள்ளார்.
30க்கும் மேலான பத்திரிகையாளர்கள்
சமீபத்தில் ரேடியோ, தொலைக்காட்சி, நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை தாலிபான் திட்டமிட்டு தாக்கிவருகிறது. ஹெல்மண்ட் மாகாணத்தில் ஓர் பத்திரிக்கையாளர் தாலிபான்களால் கடத்தப்பட்டார். ஓமர் என்கிற பத்தியா காக் வானொலி நிலையத்தில் பணியாற்றும் மேலாளர் கடத்திக் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்படும் இந்த வலதுசாரி ஆதரவு வானொலியில் தாலிபான்களுக்கு எதிராக செய்தி வெளியானதால் இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கொல்லப்பட்ட மேலாளர் அரசியல் சார்பற்றவர். கடந்த மாதம் துவங்கி இதுவரை 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தாலிபான்களால் கொல்லப்பட்டுள்ளனர். நியமதுல்லா ஹேமெட் என்கிற பத்திரிகையாளர் லஷ்கர் காஹ் மாகாணத்தில் இருந்து கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். கார் காஸ்ட் தொலைக்காட்சியில் இவர் பணியாற்றி வந்துள்ளார்.
அமெரிக்காவின் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசன்டேடிவ்ஸ் தலைவர்களுக்கு ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் முன்னதாக கடிதம் ஒன்றை எழுதினர். அமெரிக்காவுடன் இணைந்து தங்கள் பணியாற்ற விரும்புவதாக தங்கள் விருப்பத்தை இந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு விசா அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணங்களில் பெரும்பகுதியை தாலிபான்கள் தற்போது ஆக்கிரமித்துள்ளன.வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்காக தாலிபான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவை அச்சுறுத்தவே தாலிபான்கள் தொடர்ந்து ஊடகவியலாளர்களை கொன்று குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.