அல்ஜீரியாவில் காட்டுத்தீ : 42 பேர் பலி

அல்ஜீரியாவில் காட்டுத் தீ காரணமாக 25 பாதுகாப்பு தரப்பினர் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தலைநகரின் கிழக்கே கபிலி பிராந்தியத்தின் பெரும் பகுதி காட்டு தீயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் காட்டுத் தீயை கட்டுப்படுத்ததும் போராட்டத்தில் இராணுவ வீரர்கள் தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும் பலர் உயிரிழந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir