காபூல் தலிபான் வசமாகும் வாய்ப்பு – அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாநில தலைநகரங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வரும் நிலையில் அடுத்த 3 மாதங்களில் தலைநகர் காபூல் தலிபான்கள் வசமாகிவிட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானில் இருந்து பெரும்பான்மையான அமெரிக்கா மற்றும் நோட்டோ படைகள் வெளியேறிவிட்டன. இதையடுத்து அங்கு தலிபான் அமைப்பினரின் கை ஓங்கி வருகிறது.

ஆப்கான் ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வரும் தலிபான் படையினர், அடுத்தடுத்து முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த 6 நாட்களில் 8 மாநிலங்களின் தலைநகரங்களை கைப்பற்றிய தலிபான்கள், தலைநகர் காபூலை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

ஆப்கனில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக இருந்தாலும் படைகளை திரும்ப பெரும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதாவது, ஆஃப்கன் நாட்டு தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். நாங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம்.

ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இனி அவர்களுக்காக, அவர்கள் தான் போரிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தலிபான்களின் அதிரடி தாக்குதலால் ஆப்கானிஸ்தானை பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், ஆஃப்கன் மற்றும் தலிபான் அமைப்பினரிடையே கத்தாரில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசுடனான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir