: கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் 3 மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்து வருகிறது.கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் சில மருந்துகள் கொரோனா பரவலை தடுக்கும் ஆற்றலை கொண்டு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மலேரியா, புற்று நோய் மற்றும் மூட்டு தேய்மான சிகிச்சைகளுக்கு தரப்படும் 3 வகையான மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது.
இந்த 3 மருந்துகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெட்ராஸ் அதானம், ‘சாலிடாரிட்டி பிளஸ் என்ற திட்டத்தின் கீழ் 3 மருந்துகள் மீதான ஆய்வகச் சோதனையை தொடங்கியுள்ளோம்.
ஆர்டெஸ்யுனேட் மருந்து மலேரியா சிகிச்சைக்கு தரப்படுவது. இமாட்டினிப் சில வகை புற்று நோய்க்கு வழங்கப்படுவது இன்பிளிக்சி-மேப் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்புக்கு தரப்படும் மருந்துகள் ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள 600 மருத்துவமனைகளில் இந்த மருந்துகள் மீதான ஆய்வக பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது,\’ என்றார்.இதனிடையே இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள சில மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது.