ஆப்கனில் நாளுக்கு நாள் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள் கந்தகார் நகரை கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இம்மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர். அதில் பல மாகாணங்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தகாரை கடும் மோதலுக்கு பின்னர் தலிபான்கள் கைப்பற்றினர். இதனால், அந்நகர வாசிகள் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பலர், வீடுகளுக்கு உள்ளேயே பதுங்கி உள்ளனர்.