ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் மேலும் மூன்று மாகாணங்களை கைப்பற்றியுள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதைத் தொடர்ந்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள், அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.நேற்று நடத்திய தாக்குதல் வாயிலாக மூன்று மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றினர். இதன் மூலம் 13 மாகாணங்கள் தலிபான்கள் வசம் வந்துள்ளன.
மூன்று நாட்களாக நீடித்த சண்டைக்குப் பின் ஹெல்மண்டு மாகாண தலைநகர் லஷ்கர் கா தலிபான்களிடம் வீழ்ந்தது. ஜபுல் மாகாண தலைநகர் குவாலட், உருஸ்கன் மாகாண தலைநகர் திரின் கோட் ஆகியவற்றை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து மாகாண கவர்னர் விமானம் வாயிலாக காபூலுக்கு தப்பிச் சென்றார். அரசு அதிகாரிகள், தலிபான்களிடம் சரண் அடைந்தனர்.