ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரம், தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதை அடுத்து, அங்கு உள்ள இந்திய துாதரகத்தில், நம் வெளியுறவு அமைச்சக ஊழியர்கள் உட்பட 200 இந்தியர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.
அவர்களைமீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே, 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது. நாட்டின் ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி முன்னேறி வந்த தலிபான்கள், நேற்று முன் தினம் தலைநகர் காபூலை கைப்பற்றினர். இதையடுத்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.