தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள, தலிபான் பயங்கரவாத அமைப்புடன் நட்பு கொண்டாட, நம் அண்டை நாடான சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை தடுக்க, நம் மற்ற அண்டை நாடுகளை வளைத்துள்ளது போல், ஆப்கனையும் கைக்குள் வைக்க சீனா ‘மாஸ்டர் பிளான்’ வகுத்துள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது 2001ல் அல் – குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த அல் – குவைதா அமைப்பினரை ஒடுக்குவதற்காக தன் படைகளை அமெரிக்கா களமிறக்கியது. அதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தலிபான்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தது. இதனால் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தது.