உலகிலேயே முதன்முறையாக இந்தியா DNA வை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் சைடஸ் கெடிலா என்கிற மருந்து நிறுவனமே DNA-வை அடிப்படையாகக் கொண்டு குறித்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.
உலகிலேயே “சைகோவ் டி” தான் DNA மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி ஆகும்.
இந்த கொரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளது