ஆப்கன் மக்களின் உரிமை மீறல்: இந்தியா கவலை

ஆப்கன் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது அனைவருக்கும் கவலை அளிக்கிறது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில் இந்தியா கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், அங்கு மனித உரிமையை பாதுகாப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் சிறப்பு கூட்டம் நடந்தது.

ஆப்கன் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது அனைவருக்கும் கவலை அளிக்கிறது. கண்ணியத்துடன் வாழ்வாதற்கான உரிமை மதிக்கப்படுமா என்பது குறித்து ஆப்கானியர்கள் கவலை அளிக்கப்படுகிறார்கள்.

ஆப்கனுடனான இந்தியாவின் பழங்கால உறவுக்கு, மக்களுக்கு இடையிலான உறவு முக்கிய தூணாக உள்ளது. இந்தியா எப்போதும், ஆப்கானின் அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருந்துள்ளது. ஆப்கனில் உள்ள எங்களது நண்பர்கள், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா தயாராக உள்ளது. பெண்களின் குரல்கள், குழந்தைகளின் விருப்பங்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

You May Also Like

About the Author: kalaikkathir