நகை பிரியர்கள் மகிழ்ச்சி..!!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.144 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 35,648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே கண்ணாமூச்சி ஆடி வருகிறது. காலையில் ஏற்றம் காண்பதும், மாலையில் சரிவதும் தங்கத்தின் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

எப்படியிருப்பினும் இன்று விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.

கொரோனாவின் தாக்கத்தினை தொடர்ந்து கடந்த ஆண்டில் தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டது. கொரோனா பிரச்சினை, நிதி நெருக்கடி, ஊரடங்கு போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் மக்களிடையே தங்கத்துக்கான தேவை மட்டும் குறையவில்லை. விலை உயர்வு இருந்தாலும் தங்கம் வாங்குவதில் இல்லத்தரசிகள் தீவிரமாகவே இருக்கின்றனர்.

தற்போது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தோடு ஒப்பிடும்போது 9,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது.இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருப்பது நகை பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.18 குறைந்து, சவரன் 35,648 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒருகிராம் 4,456 ரூபாயாகவும், ஒரு சவரன் 35,648 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராம் 68 ரூபாயாகவும், ஒருகிலோ 68,000 ரூபாயாகவும் உள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir