தன்னார்வலர்கள் மேற்கொள்ளும் அடர்வனம்

வேளச்சேரி, பெருங்குடி பகுதியில், தன்னார்வலர்கள் சேர்ந்து, அடர்வனம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வேளச்சேரி பசுமை அறக்கட்டளை சார்பில், நேற்று பெருங்குடி ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள, அரசு திறந்தவெளி இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.’

எக்ஸ்னோரா, ரோட்டரி கிளப்’ மற்றும் வேளச்சேரி நலச்சங்கங்களில் உள்ள தன்னார்வலர்கள் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டனர். இதில், சிறுவர் – சிறுமியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பெருங்குடி – வேளச்சேரி ரயில்வே சாலை மைய தடுப்பு பகுதியிலும், மரக்கன்றுகள் நடப்பட்டன. மொத்தம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து, இதுவரை 2,000 மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.ஒவ்வொரு வாரமும் மரக்கன்றுகள் நடுவது, ஏற்கனவே நட்ட மரக்கன்றுகளை பராமரிப்பது போன்ற செயல்களில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றிற்கு தண்ணீர் ஊற்ற, தனியாக தொட்டியும் கட்டி உள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir