யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக பாதயாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
கொரோனோ வைரஸ் தாக்கத்தினால்,இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம்.
ஆனால் முருகனின் அருளால் இம்முறை யாத்திரைக்கு அருள் கிடைத்துள்ளது. எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து , ஆலய குருக்ககள் மோகனதாஸிடம் வேல் பெற்று , கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காமத்தை நோக்கி சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடைவோம்.
கடந்த காலங்களில் போன்று இம்முறையும் யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை போணி நடக்கவுள்ளோம். அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம் என தெரிவித்தார்.