லெபனானில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், முடக்கநிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டு அரசு நீடித்துள்ளது.
இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் முடக்கநிலை எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் லெபனான் முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இந்த நிலையில் தொற்று அதிகமானதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு ஐந்தாவது முறையாக லெபனான் அரசு முடக்கநிலையை நீடித்துள்ளது. லெபனானில் முதல் முறையாக கடந்த மார்ச் 15ஆம் திகதி முடக்கநிலை அறிவிக்கப்பட்டது.
லெபனானில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,086பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 உயிரிழந்துள்ளனர்.