உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,590,218 ஆக அதிகரித்துள்ளது.
உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்கின்றன.
முடக்கம், ஊரடங்கு, சமூக இடைவெளி, சுகாதாரக் கட்டுப்பாடுகள் என பல வழிகளைக் கையாண்டும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாதுள்ளது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,590,218 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347,903 அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொற்றிலிருந்தது 2,366,551 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தொடர்ந்தும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் நேற்று புதிதாக 505 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு மொத்தமாக 99,805 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, அமெரிக்காவில் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,706,226ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலில் கொரோனா காரணமாக புதிதாக 806 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 23,522 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் அங்கு 376,669 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ரஸ்யாவில் 3,633 பேர் உயிரிழந்துள்ள அதேநேரம் 353,427 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுதவிர, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் 10 இடங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
அதன்படி இந்தியாவில் இதுவரை 4,172 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 144,950 பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.