தமிழீழ விடுதலைப் புலிகள் தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைப் பலம் கொண்ட அமைப்பு என்றும், அதன் தலைவர் பிரபாகரன் சிறந்த தலைவர் என்றும் அனைவருக்கும் தெரிந்த விடயம்.”
– இவ்வாறு அரசின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான சரத் பொன்சேகா இப்போது ஏன் விடுதலைப்புலிகளையும் அதன் தலைவரையும் புகழ்ந்து பாட வேண்டும்? என்றும் அவர் எழுப்பியுள்ளார்.
பொதுத்தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகளைப் புகழ்ந்தும் ராஜபக்ச குடும்பத்தைக் கண்டபடி விமர்சித்தும் எதிரணியினர் கருத்துக்களை வெளியிடுவது வழமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது எனக்கு மரியாதை உண்டு. போர்க் களத்தில் இறுதித் தோட்டா தீரும் வரையில் போராடிய சிறந்த தலைவர் என்ற காரணத்தால் பிரபாகரன் மீது நான் மரியாதை கொண்டுள்ளேன்’ என்று முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சிங்களத் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அரசு சார்பில் கெஹலிய ரம்புக்வெல கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“விடுதலைப்புலிகள் முப்படைப் பலத்துடன் – சிறந்த தலைமைத்துவத்துடன் இருந்தார்கள். இதனை எமது பிரதமரும் பல தடைவைகள் இராணுவத்தினர் மத்தியில் வெளிப்படையாகக் தெரிவித்துள்ளார். எனினும், அவர்களின் நோக்கம் – இலட்சியம் எமது நாட்டுக்கு எதிரானதாக இருந்தது. அதனால் அவர்கள் ‘பயங்கரவாதிகள்’ என்ற பெயருடன் முற்றாக அழிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது” – என்றார்.