ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை முற்றாக இல்லாதொழிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்களைக் கருத்தில்கொண்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீண்டகாலமாக அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் முதன் முறையாகத் தளர்த்தப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை முற்றாக இல்லாதொழிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு நான் மக்களை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்” – என்றார்.