தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் அனைத்து விடயங்களுக்கும் அரசு அடிபணிய முடியாது. அத்துடன் ஜனநாயக உரிமைகளை ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மைக்காக விட்டுக் கொடுக்கவும் முடியாது என
மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு கடந்த அரசின் முக்கிய தரப்பினர்கள் கைதுசெய்யப்படவில்லை.
நல்லாட்சி அரசில் அரச அதிகாரம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கு உரிய ஆதாரங்கள் காணப்படுகின்றன.
5 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்படுவதில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. அரச அதிகாரிகளை இவ்விடயத்தில் இணைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் அனைத்து விடயங்களுக்கும் அரசு அடிபணிய வேண்டிய தேவை கிடையாது. ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மைக்காக ஜனநாயக உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட துறைகளின் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, அனைவரும் பாதுகாப்பான முறையில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார் ..