ஜீ 7 நாடுகளின் மாநாடு ஒத்திவைப்பு

எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற இருந்த ஜீ 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

அவர் மேலும் பல நாடுகளுக்கும் இந்த காணொளி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அவுஸ்ரேலியா, ரஷ்யா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க தாம் அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

தற்போதுள்ள ஜீ 7 அமைப்பு மிகவும் காலாவதியான குழுவாக உள்ளது என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

அண்மையில் சீனாவுடன் வலுத்து வரும் மோதல் மற்றும் உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு போன்றவற்றால் அமெரிக்கா அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் அமெரிக்காவுக்கு ஆதரவான நட்பு நாடுகளை ஜீ 7 குழுவில் இணைக்க ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புவதாக கூறப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir