இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்!

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இம்மாத இறுதியில் இந்தியா செலவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி,பாங்காங் ஏரி பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் ஜூன் 15ல் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 42 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் நிருபர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, இந்தியா – சீனா உறவில், சமீபத்திய ஆண்டுகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை தூண்ட சில சக்திகள் முற்படுகின்றன எனக்கூறியிருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir