இந்தியாவில் முடக்கப்பட்ட 22 யூரியூப் கணக்குகள்

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பி வருவதைத் தொடர்ந்து, 22 யூ டியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 22 யூ டியூப் சேனல்களை இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

இதில் 18 இந்திய யூ டியூப் சேனல்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 4 யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க.அரசு பொறுப்பேற்ற பின், தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir