சுப்ரமணியம் சுவாமி விசனம்

மகிந்தவின் இல்லத்தை எரித்தவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல என இந்திய மூத்த அரசியல்வாதி சுப்ரமணியம் சுவாமி விசனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டரில் ,

பிரதமரின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது என்றால், அதற்குக் காரணமானவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல. அதோடு எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்து அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென நேற்று சுவாமி கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார்.

இந்திய மூத்த அரசியல்வாதியான சுப்ரமணியம் சுவாமி தொடர்ச்சியாக ராஜபக்சர்களுடன் நெருங்கிய நட்பு ரீதியான உறவை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir