அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த அபாய அறிகுறிகளாவன:-
காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு, நெஞ்சு/வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல், உடல் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம்.
தரமான சேவையை வழங்கவும் வைத்தியசாலைகளில் நெரிசலைக் குறைக்கவும் கிளினிக்குகளில் கலந்துகொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் முற்பதிவுகளைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.