இணுவிலில் தங்கி இருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் இணுவிலில் தங்கி இருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைச்சேர்ந்த கணேஸ்பாபு என்ற 40 வயது நபருக்கே கொரேனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவருடன் மாற்றுமொரு இந்தியரும் சென்றுள்ளார். கொரோனா பரவலையடுத்து நாடு திரும்பமுடியாத நிலையில் அண்மையில் ஜுன் மாதம் முதலாம் திகதி கொழும்பில் இருந்து 713 பேர் இந்தியக் கடற்படைக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

அங்கு பரிசோதனை செய்ததில் கணேஸ்பாபு என்பவருக்கு கடந்த 2 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காலையில் கொழும்பு சென்ற அவர்கள் கப்பலுக்குச் செல்வதற்கு முன்பாக புறக்கோட்டையில் உள்ள ஓரிடத்தில் காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டே சென்றனர். கணேஸ்பாவுடன் சென்ற ஏனையவர்களுக்கு தொற்று ஏதும் இல்லாத நி்லையில் அவருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

புறக்கோட்டையில் காலைக் கடன்களை முடிக்கச் சென்ற இடத்திலிருந்தே இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்குமோ என இந்திய தூதரக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள. கணேஸ்பாபு தங்கியிருந்த இடங்களில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir