முகக் கவசம் அணியும் நடவடிக்கையால் சுவாச நோய் குறைவடைந்தது

இலங்கையில் சமகாலத்தில் முகக் கவசம் அணியும் நடவடிக்கையால் சுவாச நோய் பாரியளவு குறைவடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் முகக் கவசம் அணிந்தமையினால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை சுவாச நோய் நிபுணர்களின் சங்கத்தின் பிரதானி, கண்டி வைத்திய சங்கத்தின் தலைவர் துஷ்யந்த மெதகெதர வெளியிட்டுள்ளார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுவாச நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு நோய் தன்மை பாரிய அளவு குறைந்துள்ளதாகவும், இதனால் நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் நடவடிக்கையும் பெருமளவு குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முகக் கவசம் அணிவதனை பழக்கமாக தொடர்ந்து மேற்கொண்டால் பாதுகாப்பு நடவடிக்கையாக தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நோய் ஏற்படும் கிருமிகள் உடலுக்குள் நுழைவதும், தங்கள் உடலில் உள்ள கிருமிகள் சமூகங்களுககு செல்வதனையும் தடுக்க முடியும் என அவர் மேலும் தெரவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir