லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதல்13 பேர் பலி; 95 பேர் படுகாயம்

லிபியாவில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில், பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்; 95 பேர் பலத்த காயமடைந்தனர்.

வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது.இந்த மோதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதம் தஜோரியின் விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், அப்தில் கானி அல – கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தலைநகர் திரிபோலியில் நேற்று திடீரென மோதல் வெடித்தது.இதில் துப்பாக்கிச் சூடு, வன்முறை போன்ற சம்பவங்கள் அரங்கேறின. இந்த மோதலில் 13 பேர் உயிரிழந்தனர்; 95 பேர் பலத்த காயமடைந்தனர்.

மேலும் பல கட்டங்கள், வாகனங்களுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir