இந்திய அணி வெற்றி!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் ஐந்தாவது போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

டுபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்;டங்களாக, விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 122 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், பாரீட் அஹமட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும் முஜிப்புர் ரஹ்மான் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளையும் ஹர்ஸ்தீப் சிங், அஸ்வின் மற்றும் தீபக் ஹூதா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 61 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 12 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir