அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 5 பேர் பலி

அமெரிக்காவில், சிறுவன் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், ஒரு போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாண தலைநகரான ராலி புறநகர் பகுதியில், இருதினங்களுக்கு முன் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது, திடீரென ஒரு சிறுவன் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான். இதில், ஒரு போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின், குற்றவாளியை அவனது வீட்டில் வைத்து பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் வயது, பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.

”அமெரிக்காவில் நடைபெறும் இதுபோன்ற கண்மூடித்தனமான வன்முறை சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். துப்பாக்கி வன்முறைக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும், ”என, ராலி மேயர் ஆன் பால்ட்வின் தெரிவித்தார்.

அமெரிக்காவில், இம்மாதிரி திடீரென எக்காரணமும் இன்றி கண்மூடித்தனமாக பொதுமக்களை துப்பாக்கியால் சுடும் ‘சைக்கோ’ குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir