

தொழில்நுட்பக்கல்விப் பயிற்சித்
திணைக்களத்தின் கீழ் 1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வருடந்தோறும் 1500ற்கு
மேற்பட்ட மாணவர்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் வடமாகாணத்தின் ஒரு
முன்னனி தொழ்துறை சார்ந்த ஒர் நிறுவனமாக யாழ்ப்பாண தொழில்நுட்பவியல் கல்லூரி திகழ்கின்றது.
இங்கு கல்வியினைக் கற்ற மாணவர்கள் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்துறை சார்ந்த தொழில்நுட்ப ரீதியான உயர்தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர்.
இந்தக்கல்லூரியானது தனது அறுபதாவது ஆண்டினை 2019ஆம்
ஆண்டு பூர்த்தி செய்திருந்தது. இருப்பினும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால் அவ்வேளையில் நடாத்த முடியாது போன “வைரவிழாவினை” இன்று 27 ஆம் திகதி தொழில்நுட்பவியல் கல்லூரியில் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தொழில்நுட்பக்கல்வி
பயிற்சித்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் விருந்தின்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்வானது காலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது.